கௌரவ ஆளுநர் அவர்கள் சனசமூகநிலைய பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட சனசமூகநிலையப் பிரதிநிதிகளுடன் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் கலந்துரையாடல் நிகழ்வு 2024.02.22 மாலை 0500 மணியளவில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ.எம்.சாள்ஸ் அவர்களுடன் வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திரு.இ.வரதீஸ்வரன் அவர்களும், வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திரு.செ.பிரணவநாதன் அவர்களும், யாழ்மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் அவர்களும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை செயலாளர் திரு.கணேசன் கம்ஸநாதன் அவர்களும் கலந்துகொண்டதுடன், வடமராட்சி தெற்கு மேற்குப்பிரதேசசபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள் ஏறத்தாழ 200 பேர் வரையில் பங்குபற்றியிருந்தனர்.

”பேடகம்” மலர் வெளியீட்டு விழா

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வடமராட்சி தெற்குமேற்கு பிரதேசசபையினால் ”பேடகம்” மலர் வெளியிடப்பட்டது. இன்று 2024.02.22 பி.ப 16:30 மணியளவில் சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி மலர் வெளியீட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் அவர்களும், வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திரு.செ.பிரணவநாதன் அவர்களும், யாழ்மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை செயலாளர் திருமதி.க.தாரணி அவர்களும், வல்வெட்டித்துறை நகரசபை செயலாளர் திருமதி.நி.தர்சினி அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், மலர்க்குழு உறுப்பினர்கள், இம் மலரிற்கு ஆக்கங்கள் வழங்கியோர் பிரதேசசப உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை – வதிரி முன்பள்ளி கால்கோள்விழா

வடமராட்சி தெற்கு மேற்கு பிரசேசபையின் வதிரி முன்பள்ளியில் 2024ம் ஆண்டுக்கு புதிதாக வருகைதந்த மாணவர்களை வரவேற்கும் கால்கோள்விழா நிகழ்வு இன்று 2024.02.19 காலை 09:30 மணிக்கு நெல்லியடி முன்பள்ளியில் நடைபெற்றது.

”பேடகம்” மலர்“ வெளியீட்டு விழா நிகழ்வும், கௌரவ ஆளுநர் அவர்களுடன் சனசமூக நிலைய பிரதிநிதிகள் சந்திப்பு நிகழ்வும் பிற்போடல்.

“பேடகம்” மலரிற்கு ஆக்கம் தந்தவர்கள், சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவருக்கும் அறியத்தருவதாவது. தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை நடைபெறவிருந்த “பேடகம்”; மலர் வெளியீட்டு விழா பிற்போடப்பட்டுள்ளது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன். இந்நிகழ்வு வியாழக்கிழமை (22.02.2024) பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இதன் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட அனைத்து வகையிலான அசௌகரியங்களுக்கும் மனவருத்தமடைகின்றேன். கணேசன் கம்ஸநாதன் செயலாளர் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை கரவெட்டி

தேசிய வாசிப்புமாத போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா

2023ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்புமாத நிகழ்வின் பரிசளிப்பு விழா இன்று 2024.02.19 பி.ப 03:00மணிக்கு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை செயலாளர் திரு.கணேசன் கம்ஸநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், வடமராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.கனகசபை சத்தியபாலன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.சிறப்பு விருந்தினர்களாக யா/நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் திரு.கணேசரட்ணம் கிருஸ்ணகுமார் அவர்களும், யா/நெல்லியடி மத்திய மகளிர் கல்லூரி அதிபர் திருமதி சத்தியபாமா நவரத்தினம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை – நெல்லியடி முன்பள்ளி கால்கோள்விழா

வடமராட்சி தெற்கு மேற்கு பிரசேசபையின் நெல்லியடி முன்பள்ளியில் 2024ம் ஆண்டுக்கு புதிதாக வருகைதந்த மாணவர்களை வரவேற்கும் கால்கோள்விழா நிகழ்வு இன்று 2024.02.19 காலை 09:00 மணிக்கு நெல்லியடி முன்பள்ளியில் நடைபெற்றது.

அலுவலக நிர்வாக நடைமுறைகள் – செயலமர்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை உத்தியோகத்தர்களுக்கான அலுவலக நிர்வாக நடைமுறைகளும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் தொடர்பான செயலமர்வு 2024.02.14 அன்று சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. வடமாகாண பிரதிப்பிரதம செயலாளர் அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் திரு்ஆலாறன்ஸ் அவர்கள் இச் செயலமர்விற்கான வளவாளராக கலந்தகொண்டார்.

தைப்பொங்கல் நிகழ்வு – நெல்லியடி முன்பள்ளி

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை நெல்லியடி முன்பள்ளி பொங்கல் நிகழ்வு 2024.01.16 அன்று வதிரி முன்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

76வது தேசிய சுதந்திரதின நிகழ்வு – நெல்லியடி முன்பள்ளி

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 76வது தேசிய சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் வடமராட்சி தெற்குமேற்கு பிரதேசசபை நெல்லியடி முன்பள்ளியில் தேசியக்கொடியேற்றும் நிகழ்வு இனறு 2024.02.04 காலை 0827 மணிக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களினால் மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றது.

76வது தேசிய சுதந்திரதின நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 76வது தேசிய சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் வடமராட்சி தெற்குமேற்கு பிரதேசசபை தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியேற்றும் நிகழ்வு இனறு 2024.02.04 காலை 0827 மணிக்கு நடைபெற்றது.