வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் அட்டவணைப்படுத்தப்படாத பதவியணியைச் சேர்ந்த ஊழியர்களுக்கான அலுவலக நடைமுறை மற்றும் நேர் சிந்தனை குறித்த ஒரு நாள் பயிற்சிநெறி கிளிநொச்சியில் அமைந்துள்ள மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில் 2022.12.29 அன்று நடைபெற்றது.
Month: August 2023
முன்பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு வழங்கும் செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு
நெல்லியடி முன்பள்ளிக்கான திறன்பலகை (Smart Board) கற்றல் முறை ஆரம்ப நிகழ்வு.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையினால் நடாத்தப்படுகின்ற நெல்லியடி முன்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை இலகுவாக்கும் நோக்குடன் Smart Board மற்றும் மாணவர்களுக்கான சீருடைகள் என்பன அமரர்களான சின்னையா செல்லம்மா குடும்பத்தினரால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 2023.07.13 ம் திகதியன்று நெல்லியடி முன்பள்ளியில் பிரதேசசபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமரர்களான சின்னையா செல்லம்மா குடும்பத்தினர், ஓய்வு பெற்ற அதிபர் திரு.வ.கணேசமூர்த்தி, நெல்லியடி உப அலுவலக பொறுப்பதிகாரி, முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். மேற்படி Smart Board மற்றும் மாணவர்களுக்கான சீருடைகள் என்பவற்றை அன்பளிப்பாக வழங்கிய அமரர்களான சின்னையா செல்லம்மா குடும்பத்தினருக்கு பிரதேசசபை சார்பாக இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.