Month: September 2023
வரவுசெலவுத்திட்ட ஆலோசனைகள், முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் – வட்டாரம் – 04
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் 2024 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை வட்டார ரீதியாக பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் பிரதேசசபையால் நடாத்தப்பட்டுவருகின்றது. இதன் தொடர்ச்சியாக சமரபாகு வட்டாரத்திற்கான (4 ம் வட்டாரம்) கலந்துரையால் இன்று (07.09.2023) பிரதேசசபை செயலாளர் திரு கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நியூட்டன் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
கோவிற்சந்தை புனரமைப்பு அடிக்கல் நாட்டும் நிகழ்வு
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு சொந்தமான கோவிற்சந்தையை பிரதேசசபையுடன் கோவிற்சந்தை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல்நடும் நிகழ்வு இன்று (06.09.2023) காலை 8.00 மணிக்கு சபை செயலாளர் திரு. கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டியதுடன் திட்ட பெயர் பலகையையும் திறந்து வைத்தார். மேலும் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திரு. இராசரட்ணம் வரதீஸ்வரன், வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திரு. செல்லத்துரை பிரணவநாதன், கோவிற்சந்தை அபிவிருத்தி குழுத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை சிவசிதம்பரம் மற்றும் பொறியியலாளர் திரு. சிவராமலிங்கம் சரவணகுமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் பல்வேறு திணைக்கள அதிகாரிகள், சபை உத்தியோகத்தர்கள், கோவிற்சந்தை அபிவிருத்தி குழுவினர் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.




















வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் கரவெட்டி முன்பள்ளி விளையாட்டுப்போட்டி
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையினால் நடாத்தப்படுகின்ற நெல்லியடி முன்பள்ளியின் விளையாட்டு விழா 2023.09.03 அன்று பிரதேசசபை செயலாளர் திரு கணேசன் கம்ஸநாதன் தலைமையில் யா/திரு இருதயக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. சுப்பிரமணியம் சற்குணராஜா அவர்கள் பிரதம விருந்தினராகவும் வடமராட்சி கல்வி வலய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. கனகசபை சத்தியசீலன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்திருந்தனர்.




கோவிற்சந்தை புனரமைப்பு செயற்றிட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வு
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையுடன் கோவிற்சந்தை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து கோவிற்சந்தையை புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல்நடும் நிகழ்வு இன்று (06.09.2023) காலை 8.00 மணிக்கு சபை செயலாளர் திரு. கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களால் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன் திட்ட பெயர் பலகையையும் திறந்து வைக்கப்பட்டது. மேலும் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திரு. இராசரட்ணம் வரதீஸ்வரன், வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திரு. செல்லத்துரை பிரணவநாதன், கோவிற்சந்தை அபிவிருத்தி குழுத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை சிவசிதம்பரம் மற்றும் பொறியியலாளர் திரு. சிவராமலிங்கம் சரவணகுமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் பல்வேறு திணைக்கள அதிகாரிகள், சபை உத்தியோகத்தர்கள், கோவிற்சந்தை அபிவிருத்தி குழுவினர் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.




சேவைநலன் பாராட்டுவிழா நிகழ்வு
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையில் நீண்டகாலம் கடமையாற்றி ஓய்வுபெற்ற மற்றும் சேவைகாலத்தில் இயற்கையெய்திய ஊழியர்களுக்கான சேவைநலன் பாராட்டு நிகழ்வு 2023.08.29 ம் திகதியன்று பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை அரச சேவையாளர் கூட்டுறவுச்சங்கத் தலைவர் திருமதி சுமதி கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரு மு.தெய்வேந்திரம், திரு சி.பாலச்சந்திரன் மற்றும் திரு அ..சத்தியதாசன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் அமரர்களான ஆ.ஆனந்தராசா மற்றும் சி.சிவஞானம் ஆகியோர் நினைவுகூரப்பட்டதுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை அரச சேவையாளர் கூட்டுறவுச் சங்கத்தால் கௌரவிக்கப்பட்டனர்.






