”பேடகம்” மலர் வெளியீட்டு விழா

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வடமராட்சி தெற்குமேற்கு பிரதேசசபையினால் ”பேடகம்” மலர் வெளியிடப்பட்டது. இன்று 2024.02.22 பி.ப 16:30 மணியளவில் சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி மலர் வெளியீட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் அவர்களும், வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திரு.செ.பிரணவநாதன் அவர்களும், யாழ்மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை செயலாளர் திருமதி.க.தாரணி அவர்களும், வல்வெட்டித்துறை நகரசபை செயலாளர் திருமதி.நி.தர்சினி அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், மலர்க்குழு உறுப்பினர்கள், இம் மலரிற்கு ஆக்கங்கள் வழங்கியோர் பிரதேசசப உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.