சூரியப்படல் மின்னுற்பத்தி சாதனம் பொருத்துதல்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையினால் நிர்வகிக்கப்படும் வதிரி முன்பள்ளியில் சபைநிதி ஒதுக்கீட்டின் கீழ் 20 kW சூரியப்படல் தொகுதி நிறுவப்பட்டுள்ளது. இத்தொகுதி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கடந்த 18.02.2025 முதல் தேசிய மின் வடத்திற்கு விநியோகிக்கப்படுகின்றது. இதன் மூலம் பிரதேசசபைக்கு வருடாந்தம் ரூபா 600,000.00 சராசரி வருமானம் எதிர்பார்க்கப்படுகின்றது.