தேசிய வாசிப்புமாத போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் தேசிய வாசிப்பு மாத நிறைவு விழாவில் “பேடகம் 2” மலர் குழு உறுப்பினர்களும் கலைஞர்களும் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

பேடகம் 02 மலர்க்குழுவினர், பிரதேசசபை கீதம் உருவாக்கியோர் கௌரவிப்பு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் தேசிய வாசிப்பு மாத நிறைவு விழாவில் “பேடகம் 2” மலர் குழு உறுப்பினர்களும் கலைஞர்களும் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

பேடகம் – 02 மலர் வெளியீட்டு நிகழ்வு

பேடகம் 2 மலர் வெளியீட்டு நிகழ்வு 23.02.2025 அன்று பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா அவரகள் மதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பேடகம் 2 மலரினை வெளியிட்டு வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்த வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திரு.செ.பிரணவநாதன் அவர்கள் முதற்பிரதியைப்பெற்றுக்கொண்டார்.

 

சூரியப்படல் மின்னுற்பத்தி சாதனம் பொருத்துதல்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையினால் நிர்வகிக்கப்படும் வதிரி முன்பள்ளியில் சபைநிதி ஒதுக்கீட்டின் கீழ் 20 kW சூரியப்படல் தொகுதி நிறுவப்பட்டுள்ளது. இத்தொகுதி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கடந்த 18.02.2025 முதல் தேசிய மின் வடத்திற்கு விநியோகிக்கப்படுகின்றது. இதன் மூலம் பிரதேசசபைக்கு வருடாந்தம் ரூபா 600,000.00 சராசரி வருமானம் எதிர்பார்க்கப்படுகின்றது.

வதிரி முன்பள்ளி கால்கோள்விழா

வடமராட்சி தெற்கு மேற்கு பிரசேசபையினால் நிர்வகிக்கப்படும் வதிரி முன்பள்ளிக்கு 2025 ம் ஆண்டு புதிதாக வருகைதந்த மாணவர்களை வரவேற்கும் கால்கோள்விழா நிகழ்வு இன்று (2025.02.11) வதிரி முன்பள்ளியில் நடைபெற்றது.

நெல்லியடி முன்பள்ளி கால்கோள்விழா

வடமராட்சி தெற்கு மேற்கு பிரசேசபையினால் நிர்வகிக்கப்படும் நெல்லியடி முன்பள்ளிக்கு 2025 ம் ஆண்டு புதிதாக வருகைதந்த மாணவர்களை வரவேற்கும் கால்கோள்விழா நிகழ்வு இன்று (2025.02.11) நெல்லியடி முன்பள்ளியில் நடைபெற்றது.

கிளீன்சிறீலங்கா திட்டத்தின்கீழ் வீதி துப்புரவுப்பணி

அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை” (Clean Srilanka) செயற்றிட்டத்திற்கமைய  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் அனுசரணையுடன் கணபதி அறக்கட்டளையினால்  மாலிசந்தியிலிருந்து மடத்தடி வரையான பருத்தித்துறை  வீதியின் இருமருங்கிலும் துப்பரவுபணிகள் நடைபெற்றது.

நெல்லியடி முன்பள்ளியில் சுதந்திரதின நிகழ்வும் மரம் நடுகையும்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரசேசபையினால் நிர்வகிக்கப்படும் நெல்லியடி முன்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்பள்ளி சிறார்களினால் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டபோது……

கிளீன்சிறீலங்கா திட்டத்தின்கீழ் வீதி துப்புரவுப்பணி

அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை” (Clean Srilanka) செயற்றிட்டத்திற்கமைய நேற்றைய தினம் (26.01.2025) வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் அனுசரணையுடன் கணபதி அறக்கட்டளையினால்  அல்வாய் முத்துமாரி அம்மன் கோவிலில் இருந்து பாரதிதாசன் சனசமூக நிலையம் வரையான வீதியின் இருமருங்கிலும் துப்பரவுபணிகள் நடைபெற்றது.

கிளீன் சிறீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீதி துப்புரவு செய்தல்

அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை” (Clean Srilanka) செயற்றிட்டத்திற்கமைய நேற்றைய தினம் (26.01.2025) வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் அனுசரணையுடன் கணபதி அறக்கட்டளையினால் மாலைசந்தையிலிருந்து பாரதிதாசன் சனசமூக நிலையம் வரையான வீதியின் இருமருங்கிலும் துப்பரவுபணிகள் நடைபெற்றது.