காணி உப பிரிவிடல் ஒன்றிணைத்தலுக்கான அனுமதி
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

1.முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்

விண்ணப்பதாரி செய்ய விரும்புகின்ற அபிவிருத்தி வேலையின் இயல்பின் அடிப்படையில் உரித்தாகும் விண்ணப்பப்படிவத்தை, 2021 நகரஅபிவிருத்தி அதிகாரசபையின் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி கட்டளைகளின் 1ஆம் உப அட்டவணையின் 'ஆ' படிவம் - இணைப்பு I 'ஆ' படிவம் - இணைப்பு II'ஆ' படிவம் - இணைப்பு III'ஆ' படிவம் - இணைப்பு IV'ஆ' படிவம் - இணைப்பு V'ஆ' படிவம் - இணைப்பு VI,ஆகிய ஆவணங்கள் மற்றும் 3ஆம் உப அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய நபரால் வழங்கப்பட்ட சான்றிதழும் சமர்ப்பித்தல் வேண்டும்.

காணி உப பிரிப்பு அல்லது ஒருங்கிணைப்பு ஒன்றினை அனுமதித்துக் கொள்வதற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற  விண்ணப்பப்பத்திரங்களை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உப அலுவலகங்களான நெல்லியடி உப அலுவலகம், கட்டைவேலி உப அலுவலகம், உடுப்பிட்டி உப அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளமுடியும்.

விண்ணப்பப்படிவத்தைத் தரவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்துக.

2. நடப்பாண்டு ஆதன வரி செலுத்திய பற்றுச் சீட்டின் பிரதி.

3. உப பிரிவிடுகை மேற்கொள்ளப்படவுள்ள  காணிக்கான உரித்து ஆவணம் மூலப்பிரதியும் நிழற்பட பிரதியும்.    (காணி உறுதி,  அனுமதி பத்திரம், போன்றன)

4. ஒரு மாத காலத்தினுள் காணி பதிவகத்திலிருந்து இறுதியாக மாற்றம் செய்யப்பட்ட உறுதிக்குரிய தோம்பும்         உறுதியின் பிரதியும்.

5. உப பிரிவிடுகை மேற்கொள்ளப்படவுள்ள  காணியின்   நில அளவைப் படம்.

6. பிரிக்கப்படவுள்ள  துண்டாடப்படும், பிரிவிடப்படும்  காணி துண்டுகளினை காட்டும் நில அளவைப்படம்

7. ஏற்கனவே குறித்த காணி அல்லது காணியின் ஒரு பகுதி உப பிரிவிடல் அல்லது ஒருங்கிணைப்புச்
    செய்யப்பட்டிருப்பின் உள்ளுராட்சி மன்றத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரமும் அதன் பிரதியும்.

8. ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் ஆவணத்தின் பிரதி.

9. குறித்த காணியன் உப பிரிவிடுகையினால் தற்போதுள்ள கட்டடம் ஒன்று பிரிவடையும் சந்தர்ப்பத்தில்
    கட்டத்தின் அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் பிரதி.

10. காணி அமைந்துள்ள இடத்திற்கு இலகுவில் பிரவேசிக்க கூடியதாக அமைந்த இட அமைவு வரைபடம்.


செலுத்த வேண்டிய கட்டணம்

அபிவிருத்தியின் தன்மைக்கேற்ப மாறுபடும். (சேவை கருமபீடத்துடன் கட்டண அட்டவணையை பரீட்சீர்த்து உரிய கட்டணங்களைச் செலுத்தமுடியும்)

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்

முன் அலுவலக அதிகாரி, மற்றும் விடய உத்தியோகத்தர்
தொழில்நுட்ப அதிகாரி அல்லது பொது சுகாதார வைத்திய அதிகாரி


சேவையை நிறைவுசெய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை

14 நாட்கள் - 21 நாட்கள்

பின்செல்க
முகப்பு