வாகன இயந்திரங்களை வாடகைக்கு வழங்குதல்
உள்ளூராட்சிமன்றத்திடம் காணப்படக்கூடிய இயந்திர வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி அபிவிருத்தி செயற்பாடுகளை செய்வதற்கு குறித்த உள்ளுராட்சிமன்றத்தின் எல்லைக்குள் இருக்ககூடிய மக்களுக்கு தேவையான வசதியினை உள்ளூராட்சிமன்றம் வழங்குகின்றது. குறித்த வாகன வசதிகளை வழங்குவதற்கு பொருத்தமான கட்டணங்களை உள்ளூராட்சிமன்றம் அறவிட்டுக்கொள்ளும். குறித்த கட்டணமானது குறித்த கட்டணமானது வாகனங்களின் பராமரிப்பு, வாகன சாரதிக்கான சம்பளம், வாகன எரிபொருட்செலவு போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
1.சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
விண்ணப்பப்பத்திரங்களை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உப அலுவலகங்களான நெல்லியடி உப அலுவலகம், கட்டைவேலி உப அலுவலகம், உடுப்பிட்டி உப அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளமுடியும்.
செலுத்த வேண்டிய கட்டணம்
இயந்திரம் மற்றும் வாகனத்தின் வகை மற்றும் குறித்த சேவைக்காக வாகனம் பயனிக்க வேண்டிய தூரத்தின் அடிப்படையில் கட்டணம் தீர்மானிக்கப்படும்.
சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்
சபையின் முன் அலுவலக அதிகாரி;
வாகனத்தின் சாரதி
சேவையை நிறைவுசெய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை
ஒரு நாள