எம்மைப்பற்றி
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை
தோற்றம்
பிரித்தானிய ஆட்சியின் இறுதிப்பகுதியில் இலங்கையில் உள்ளுராட்சி தொடர்பான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 1865 மற்றும் 1866 ஆம் காலப்பகுதியில்; கொழும்பு, கண்டி, காலி ஆகிய நகரங்களில் மாநகர சபைகள், 1865ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாநகர கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டன.
1871ஆம் ஆண்டின் 26ம் இலக்க கிராமக் குழுக்கள் சட்ட விதி (Village Committees Ordinance) நிறைவேற்றப்படதன் பிரகாரம் கிராம சபைகள் நிறுவப்பட்டன. பின்னர் 1892 இல் சிறிய நகரங்களில் சுகாதார குழுக்கள் (sanitary boards) அமைக்கப்பட்டன.
இதனிடையே 1928 ஆம் ஆண்டில் டொனமூர் ஆணைக்குழுவின் விதப்புரைக்கு அமைவாக உள்ளுராட்சித் திணைக்களம் தாபிக்கப்பட்டது. தொடர்ந்து 1940 இலும் 1946 இலும் முறையே பட்டின சபைகளும் (Town council ordinance 1939 of No 61) நகரசபைகளும் (Urban Council Ordinance 1942 of No 03) உருவாகின.
அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க சட்டத்திற்கு அமைவாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் உருவாக்கப்பட்டபோது கிராமசபைகளுக்கு உரிய அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு கையளிக்கப்பட்டது. அரசியல் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பல காரணங்களால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாமல் இல்லாதொழிந்தது.
இதன் பின்னர் 1987ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபையின் கீழ் உப அலுவலகங்களாக காணப்பட்ட பட்டின சபைகளும் கிராம சபைகளும் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் ஒன்றாக்கப்பட்டு பிரதேச சபைகள் தாபிக்கப்பட்டது.
இதற்கமைய நெல்லியடி பட்டினசபை, கட்டைவேலி கிராம சபை, உடுப்பிட்டி கிராம சபை என்பன 1987ம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் ஒன்றாக்கப்பட்டு திக்கம் வீதி வதிரியில் உள்ள பட்டினசபை அலுவலகத்தில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையாக இயங்கியது.
அதனைத் தொடர்ந்து கொடிகாமம் வீதியில் உள்ள தனியார் வீட்டில் 2003ம் ஆண்டு வரை வாடகைக்கு இயங்கிவந்தது.
2003ம் ஆண்டு பிரதேச சபை தனக்கென ஒரு காணியை கொள்வனவு செய்து பிரமாண்டமான ஒரு புதிய கட்டடம் அமைக்கப்பட்டு, கருவறை முதல் கல்லறை வரை என்னும் தொனிப்பொருளுக்கிணங்க மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது.
பிரதேச சபையானது அதன் பிரதேசத்தில் பகிரங்க சுகாதார பொது நிருவாக அதிகார சபையாகவும் பிரதான பொதுவழிகள் தவிர்ந்த அனைத்து பொதுவழிகளினதும் தொடர்புகளினதும் பொது நிருவாக அதிகார சபையாகவும் செயற்பட்டு வருகின்றது.
சபையின் ஆளுகைப் பிரதேசம்
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையானது, இலங்கையின் வடக்கு மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் வடமராட்சி பிரதேசத்தின் இதயப் பகுதியில், 35 கிராம உத்தியோகத்தர் பிரிவினை உள்ளடக்கிய 88 சதுர கிலோமீற்றர் பரப்பளவினைக்கொண்ட பிரதேசமாகும். இதில் 63.7 சதுரகிலோமீட்டர் நிலப்பகுதியாகக் காணப்படுகின்றது. அத்துடன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லையே வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் நிர்வாக எல்லையாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது சபையின் எல்லைகள் கீழ்க்குறிப்பிடப்பட்டதற்கமைய வரையறுக்கப்பட்டுள்ளது.
வடக்கு - வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தின் ஆளுகைப் பிரதேசம் மற்றும்
பருத்தித்துறை பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம்
கிழக்கு - பருத்தித்துறை பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம்
தெற்கு - சாவகச்சேரி பிரதேசசபையின் ஆளுகைப் பிரதேசம்
மேற்கு - வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம்
எமது சபையானது 68.9 சதுர கிலோமீற்றர் விஸ்தீரணமுடைய 19 வட்டார பிரிவுகளை கொண்ட 35 கிராமசேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதான 187 கிராமங்களை கொண்டுள்ள பாரிய பிரதேசமாக காணப்படுகின்றது. சபையின் நிர்வாக நோக்கங்களிற்காகவும் மக்கள் சேவையினை இலகுவாக பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் நெல்லியடி, உடுப்பிட்டி மற்றும் கட்டைவேலி எனும் 03 உப அலுவலகப் பிரிவுகளை கொண்டுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உட்கட்டமைப்பு பிரிவுகள்
உப அலுவலகங்கள்-
1. நெல்லியடி உப அலுவலகம்.
2. உடுப்பிட்டி உப அலுவலகம்.
3. கட்டைவேலி உப அலுவலகம்.
சந்தைகள்-
1.நெல்லியடி நவீன சந்தை
2.நெல்லியடி பொதுச் சந்தை
3. கொட்டடிச் சந்தை
4. சாண்டா சந்தை
5. கோயிற் சந்தை
6. மண்டான் சந்தை
7. அந்திரான் சந்தை
8 .துன்னாலை வடக்கு பொதுச் சந்தை
நூலகங்கள் -
1. வதிரி பொது நூலகம்.
2. உடுப்பிட்டி பொது நூலகம்.
3. கட்டைவேலி பொது நூலகம்.
ஆயுள்வேத வைத்தியசாலைகள்-
1. உடுப்பிட்டி ஆயுர்வேத வைத்தியசாலை.
2. கட்டைவேலி ஆயுர்வேத வைத்தியசாலை.
3. கரவெட்டி ஆயுர்வேத வைத்தியசாலை.
முன்பள்ளிகள் -
1. நெல்லியடி முன்பள்ளி
2. வதிரி முன்பள்ளி முள்ளி
சேதனப்பசளை உற்பத்தி நிலையம்.
இந் நிலையமானது ஜப்பான் அரசின் நிதி உதவித்திட்டத்தின் கீழ் 2021ம் ஆண்டு முள்ளி பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் இயந்திரமயமாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்தி நிலையமாக இது மட்டுமே விளங்குகின்றதுடன் இலங்கைத்தீவில் நிறுவப்பட்ட மூன்றாவது நிலையமாகவும் காணப்படுகின்றது. இவ் நிலையத்தின் மூலம் நாளாந்தம் சுமார் 50 மெ.தொன் வரையான சேதன கழிவுகள் பரிகரிக்கக்கூடிய கொள்ளளவுடையது.
சபையின் சனத்தொகைப் பரம்பல் மொத்த சனத்தொகை 46104 குடும்பங்களின் எண்ணிக்கை 15327 சபையின் இன ரீதியான பரம்பல் தமிழர் 46089 முஸ்லீம் 12 சிங்களவர் 3 சபையின் மத ரீதியான பரம்பல் இந்து 44712 கிறிஸ்தவர் 1377 இஸ்லாம் 12 பௌத்தம் 3 தொழில்செய்வோர் விபரம் அரச தொழில் 2725 வணிகம் 1952 விவசாயம் 2221 கடற்றொழில் 176 ஏனையவை 8830 கலாசார மதக் கட்டமைப்புகள் இந்து ஆலயங்கள் 111 தேவாலயங்கள் 09 பள்ளிவாசல் 0 விகாரை 0