வியாபார வரி
வரியொன்றை விதிப்பதற்கு அரசியலமைப்பின் 148 ஆவது உறுப்புரை மூலம் பாராளுமன்றத்திற்கு கிடைத்துள்ள அதிகாரங்களை, சட்டமொன்று ஊடாக வேறு ஏதேனும் அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்குப் பாராளுமன்றத்திற்கு கிடைத்துள்ள அதிகாரத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரப் பிரதேசமொன்றினுள் ஏதேனும் வியாபாரமொன்றை  நடாத்திச் செல்கின்ற ஒருவரிடமிருந்து வரியொன்றை விதித்து அறவிடுவதற்கு, 255 ஆவது அதிகாரமான மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் மூலம் நகர சபைகளுக்கும் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் மூலம் பிரதேச சபைகளுக்கும் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் அந்த உள்ளூராட்சி மன்றங்களினால் அதன் அதிகாரப் பிரதேசத்தினுள் நடாத்திச் செல்லப்படுகின்ற வியாபாரங்கள் மீது வரியொன்றை விதித்து அறவிட முடியும்

செலுத்த வேண்டிய கட்டணம்
 வியாபாரத்தின் தன்மைக்கேற்ப காலத்திற்குக்காலம் பிரதேச சபையினால் தீர்மானித்து வர்த்தமானியில் வெளிப்படுத்தப்படும் கட்டணம் அறவிடப்படும்.

விண்ணப்பப்பத்திரங்களை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உப அலுவலகங்களான நெல்லியடி உப அலுவலகம், கட்டைவேலி உப அலுவலகம், உடுப்பிட்டி உப அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளமுடியும்.

 

கட்டண விபரம் தொர்பான வர்த்தமானி அறிவித்தலை தரவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்துக
விண்ணப்பப்படிவத்தைத் தரவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்துக.

 

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்  

உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்

விடய உத்தியோகத்தர் 

 

சேவையை நிறைவு செய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை 

அனைத்து தேவைப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டால்   உடனடியாக அதே தினத்தில்