அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக்காலத்தை நீடித்தல்
உள்ளூராட்சி மன்றத்தின் எல்லைக்குள் மேற்கொள்கின்ற எந்தவொரு வகையிலுமான கட்டுமானங்களுக்காக அல்லது காணி உபபிரிவிடலுக்காக வழங்கிய கட்டுமான அனுமதிப்பத்திரம் அல்லது அபிவிருத்தி அனுமதிப்பத்திரத்தின்; செல்லுபடியான காலம் ஓராண்டுக்கு மட்டும் ஏற்புடையதாகும். அந்த அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியான காலப்பகுதிக்குள் ஏற்புடைய கட்டுமானங்கள் அல்லது அபிவிருத்தி பணிகள் என்பன முடிவுறுத்தப்பட்டு இசைவுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
எவரேனுமொரு நபருக்கு ஓராண்டு காலப்பகுதியில் ஏற்புடைய கட்டுமானங்களை முடிவுறுத்துவதற்கு இயலாது எனின், குறித்த அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியான காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்படலாம்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
2021 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடல் மற்றும்; அபிவிருத்தி கட்டளைகளில் 1 ஆவது அட்டவணையில் 'D' படிவத்துடன் அதன்மூலம் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
அனுமதிப்பத்திரங்களின் கால நீடிப்பிற்காக சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பப்பத்திரங்களை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உப அலுவலகங்களான நெல்லியடி உப அலுவலகம், கட்டைவேலி உப அலுவலகம், உடுப்பிட்டி உப அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளமுடியும்.
ஏனைய ஆவணங்கள்
பூரணப்படுத்தப்பட்ட காலநீடிப்பு விண்ணப்ப படிவம்
2 உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை பிரதி
3 அபிவிருத்தி அனுமதிப்பத்திரம் ஃ பூர்வாங்க திட்டமிடல் சிபார்சு பிரதி
4 செயன்முறைக் கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டு
சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்
1. முன் அலுவலக அதிகாரி; மற்றும் விடய உத்தியோகத்தர்
2. தொழில்நுட்ப அதிகாரி அல்லது பொது சுகாதார வைத்திய அதிகாரி
சேவையை நிறைவுசெய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை
14 நாட்கள் - 21 நாட்கள் (துல்லியமான ஆவணங்கள் சமர்ப்பிக்கின்ற பட்சத்தில்)