விளம்பரங்களுக்கான அனுமதி
விளம்பர அறிவித்தல் என்பது எவரேனும் ஆளினால் ஏதேனும் காணியிலோ, கட்டிடத்திலோ வாகனத்திலோ நிர்மாணிப்பிற்கு மேலாக அல்லது அதன் மீது முழுமையாகவோ பகுதியளவிலோ காட்சிப்படுத்தப்படுகின்றதும் மக்களின் அறிந்துகொள்ளல் அல்லது கவனத்தின் பொருட்டு காட்சிப்படுத்துகின்ற, ஒட்டுகின்ற, பொருத்துகின்ற, நிர்மாணிக்கின்ற, தொங்கவிடப்படுகின்ற அல்லது வேறுவிதமாக இடஅமைவு செய்யப்படுகின்ற பிரச்சாரக்கருமத்திற்காக பாவிக்கப்படுகின்ற ஏதேனும் எழுத்து, சொல்   அல்லது  உருவப்படக்குறிப்பினை உள்ளடக்குகின்ற விளம்பர அறிவித்தல், பெனர் அல்லது கட்அவுட் அல்லது வேறுவிதமான மாதிரியுரு, விளம்பரத்தாள் அறிவித்தல், வர்த்தக அறிவித்தலையும் கருதுகின்றது. இந்த வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார எல்லைக்குள் காட்சிப்;படுத்தப்படும் விளம்பர அறிவித்தல்களை பொதுமக்களின் பாதுகாப்பையும், வசதிகளையும் சௌகரியங்களையும் உறுதிசெய்வதற்கேற்றவாறு கட்டுப்படுத்தி நிர்வகித்தல் என்பது உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பாகும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

(அ)  சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம். 

விண்ணப்பப்பத்திரங்களை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உப அலுவலகங்களான நெல்லியடி உப அலுவலகம், கட்டைவேலி உப அலுவலகம், உடுப்பிட்டி உப அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளமுடியும். 

விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்துக

(ஆ) A4 அளவிலான கடதாசியில் அச்சிடப்பட்ட அல்லது கையினால் வரையப்பட்ட (பயன்படுத்தப்படும் வர்ணங்களையும் காட்டுகின்ற), காட்சிப்படுத்த எதிர்பார்க்கும் பிரச்சார விளம்பரத்தின் சமச்சீரான மாதிரியொன்று

 

(இ) ஏதேனும் வீதியின் இருப்புப் பகுதியில் பொருத்தப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்ற பிரச்சார விளம்பரப் பலகையாக இருப்பின் ஏற்புடையவாறு அந்த வீதி சொந்தமாகவுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை அல்லது மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை அல்லது உள்ளூராட்சி நிறுவனத்திலிருந்து அதற்காக வழங்கப்பட்ட அனுமதி

 

(ஈ) ஏற்புடைய பிரச்சார விளம்பரப் பலகை காட்சிப்படுத்தப்படும் இடத்திற்குரிய பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினால் இணக்கம் தெரிவித்து வழங்கப்பட்ட கடிதத்தின் பிரதியை சமர்ப்பிக்கவேண்டும்.

 

(உ) ஏதேனும் தனியார் காணியொன்றில் அல்லது கட்டிடத்தில் பொருத்தப்படுகின்ற அல்லது காட்சிப்படுத்தப்படுகின்ற  பிரச்சார விளம்பரமாக இருப்பின், அந்தக் காணியின் அல்லது கட்டிடத்தின் உரிமையாளர் அல்லது உரிமையாளர்களினால் அதற்கு இடமளிப்பதற்குவிருப்புத் தெரிவிக்கும் கடிதத்தின் பிரதி. 

செலுத்த வேண்டிய கட்டணம்

வர்த்தமானிப்பத்திரிகையில்  வெளியிடப்பட்ட துணைவிதிகளின் பிரகாரம் கட்டணங்கள் அறவிடப்படும்

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்  

உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்

தொழில்நுட்ப உத்தியோகத்தர்

விடய உத்தியோகத்தர் 

சேவையை நிறைவு செய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை 

2-3 நாட்கள்;