மரங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைத் தடுத்தல்
உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளில் மக்களின் மகிழ்ச்சி, இடவசதி, மற்றும் நலன்புரி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பாதுகாத்தல் என்பது பிரதான காரணமாகும். இக்காரணங்களிடையே மக்கள் அச்சத்தை தவிர்த்தலும் உள்ளடக்கப்படும். குறிப்பிட்டதொரு மரமொன்றின் அல்லது அதன் பகுதியினால் மர உரிமையாளர் அல்லாத வெளி நபரொருவருக்கு ஆபத்தான நிலைமை ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்தில் குறித்த அச்;சத்தை அகற்றுவதற்கு உள்ளூராட்சி மன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏதேனும் சந்தர்ப்பத்தில் நபரொருவரின் சொத்திற்கு அல்லது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய ஏதேனும் மரமொன்றை முழுமையாக வெட்டி அகற்ற வேண்டுமென அல்லது அதன் பகுதியொன்றை வெட்டி அகற்றுவதற்கு போதுமான காரணங்கள் கண்டறிப்பட்டுள்;ள சந்தர்ப்பத்தில் அம்மரத்தை வெட்டி அகற்றுவதற்கான கட்டளையை பிறப்பிக்க முன்னர் அம்மரம் 1956 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க மரங்கள் வெட்டுவதை கட்டுப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டளைகளில் வெட்டி அகற்ற தடை செய்யப்பட்டுள்ள மரமா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது சட்டத் தேவைப்பாடாகும்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் வேண்டும்.
விண்ணப்பப்பத்திரங்களை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உப அலுவலகங்களான நெல்லியடி உப அலுவலகம், கட்டைவேலி உப அலுவலகம், உடுப்பிட்டி உப அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளமுடியும்.
சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்
1.விடய உத்தியோகத்தர்
2.தொழில்நுட்ப உத்தியோகத்தர்
சேவையை நிறைவு செய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை
3-5 நாட்கள்;