மண்டபம் வாடகைக்கு வழங்குதல்
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார எல்லையில் வசிக்கும் மக்களின் பொது களியாட்டங்கள், வைபவங்கள் அல்லது மாநாடுகள் போன்றவற்றை நடத்துவதற்கு வசதியளிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு சேவைகளாக உபயோகிக்கக்கூடிய அரங்குகளை உருவாக்கி மக்களுக்கு வழங்க கூடியதாக பேணிச் செல்லுதல்.

 

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

1.சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்

விண்ணப்பப்பத்திரங்களை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உப அலுவலகங்களான நெல்லியடி உப அலுவலகம், கட்டைவேலி உப அலுவலகம், உடுப்பிட்டி உப அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளமுடியும்.

 

விண்ணப்பப்படிவத்தைத் தரவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்துக.

 

செலுத்த வேண்டிய கட்டணம்

உள்ளூராட்சிமன்றங்களினால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் அரசினால் அவ்வப்போது விதிக்கப்படும் வரி மற்றும் மீளச் செலுத்தப்படும் கட்டணங்கள் போன்றவை குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு செலுத்தப்படுதல் வேண்டும்.இயந்திரம் மற்றும் வாகனத்தின் வகை மற்றும் குறித்த சேவைக்காக வாகனம் பயனிக்க வேண்டிய தூரத்தின் அடிப்படையில் கட்டணம் தீர்மானிக்கப்படும். 

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்  

உள்ளூராட்சி மன்றத்தின் முன் அலுவலக அதிகாரி;

வைபவமண்டப பொறுப்பாளர் 

சேவையை நிறைவு செய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை 

ஒரு நாள்

 
Calendar is loading...
Powered by Booking Calendar
-
Available
 
-
Booked
 
-
Pending