உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் 2019 – 2024 வரையான காலப்பகுதியில் உள்ளூராட்சி மன்றங்களில் செயல்படுத்தப்பட்ட பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (LDSP) நிறைவுநாள் நிகழ்வு 2024.12.27 ம் திகதி பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பாக செயல்பட்ட 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கு கௌரவ ஆளுநர் அவர்களினால் மெச்சுரை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கும் கௌரவ ஆளுநர் அவர்களினால் மெச்சுரை சான்றிதழ் வழங்கப்பட்டது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் வதிரி பொதுநூலகமானது 2023 ம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தில் வாசிப்பு ஊக்குவிப்பு திட்டங்களை செயற்படுத்தியமையை பாராட்டி தேசிய நூலகம் மற்றும் ஆவணமாக்கல் சபையினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. டிசம்பர் 19 ம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் வதிரி பொதுநூலக நூலகர் திரு. கந்தசாமி ஈஸ்வரன் அவர்கள் விருது மற்றும் பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

இலங்கை பட்டயக் கணக்கு நிறுவனத்தினால் சிறந்த வருடாந்த கணக்குகளை சமர்ப்பிக்கும் அரச நிறுவனங்களுக்கு வழங்னப்படும் 2023ம் ஆண்டுக்கான விருது கடந்த 2024.12.02 அன்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு வழங்கப்பட்டது.
