வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் 2024 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை வட்டார ரீதியாக பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் பிரதேசசபையால் நடாத்தப்பட்டுவருகின்றது. இதன் தொடர்ச்சியாக சமரபாகு வட்டாரத்திற்கான (4 ம் வட்டாரம்) கலந்துரையால் இன்று (07.09.2023) பிரதேசசபை செயலாளர் திரு கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நியூட்டன் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.