வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு சொந்தமான கோவிற்சந்தையை பிரதேசசபையுடன் கோவிற்சந்தை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல்நடும் நிகழ்வு இன்று (06.09.2023) காலை 8.00 மணிக்கு சபை செயலாளர் திரு. கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டியதுடன் திட்ட பெயர் பலகையையும் திறந்து வைத்தார். மேலும் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திரு. இராசரட்ணம் வரதீஸ்வரன், வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திரு. செல்லத்துரை பிரணவநாதன், கோவிற்சந்தை அபிவிருத்தி குழுத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை சிவசிதம்பரம் மற்றும் பொறியியலாளர் திரு. சிவராமலிங்கம் சரவணகுமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் பல்வேறு திணைக்கள அதிகாரிகள், சபை உத்தியோகத்தர்கள், கோவிற்சந்தை அபிவிருத்தி குழுவினர் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.