சேவைநலன் பாராட்டுவிழா நிகழ்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையில் நீண்டகாலம் கடமையாற்றி ஓய்வுபெற்ற மற்றும் சேவைகாலத்தில் இயற்கையெய்திய ஊழியர்களுக்கான சேவைநலன் பாராட்டு நிகழ்வு 2023.08.29 ம் திகதியன்று பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை அரச சேவையாளர் கூட்டுறவுச்சங்கத் தலைவர் திருமதி சுமதி கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரு மு.தெய்வேந்திரம், திரு சி.பாலச்சந்திரன் மற்றும் திரு அ..சத்தியதாசன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் அமரர்களான ஆ.ஆனந்தராசா மற்றும் சி.சிவஞானம் ஆகியோர் நினைவுகூரப்பட்டதுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை அரச சேவையாளர் கூட்டுறவுச் சங்கத்தால் கௌரவிக்கப்பட்டனர்.