வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையினால் நடாத்தப்படுகின்ற நெல்லியடி முன்பள்ளியின் விளையாட்டு விழா 2023.09.03 அன்று பிரதேசசபை செயலாளர் திரு கணேசன் கம்ஸநாதன் தலைமையில் யா/திரு இருதயக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. சுப்பிரமணியம் சற்குணராஜா அவர்கள் பிரதம விருந்தினராகவும் வடமராட்சி கல்வி வலய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. கனகசபை சத்தியசீலன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்திருந்தனர்.