வாழ்வாதார உதவிகள் வழங்குதல்

பொருளாதாரதீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கென வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையினால் 2023ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கோழிக்ஞ்சுகள், கோழிக்கூடுகள், சுய உணவு உற்பத்திக்கான உணவுப்பாத்திரங்கள், எரிவாயு ஆகியன வழங்கும் நிகழ்வு வடமராட்சி தெற்கு மேறகு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் கடந்த 2024.02.01 அன்று சபையின் செயலாளர் திரு.கணேசன் கம்ஸநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வருடாந்த செயலாற்றுகைத்திட்டம் தயாரித்தல் செயலமர்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரரதேசசபை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த செயற்பாட்டறிக்கை தயாரித்தல் செயலமர்வு 2024.01.26 அன்று சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கணக்காளர் திரு.திருக்குமார் அவர்கள் இச் செயலமர்விற்கான வளவாளராக கலந்தகொண்டார்.

எளிய முறையில் இயற்கை விவசாயம் கருத்தரங்கு.

"எளிய முறையில் இயற்கை விவசாயம்" கருத்தரங்கு வடமராட்சி அபிவிருத்தி நிறுவகம் மற்றும் புதிய வெளிச்சம் இணை ஏற்பாட்டில் தமிழ்நாட்டின் இயற்கை விவசாய விஞ்ஞானி பாமயன் அவர்களால் நடாத்தப்பட்ட எளிய முறையில் இயற்கை விவசாயம் கருத்தரங்கு.21.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணி வரை, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

தைப்பொங்கல் நிகழ்வு – வதிரி முன்பள்ளி

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை வதிரி முன்பள்ளி பொங்கல் நிகழ்வு 2024.01.17 அன்று வதிரி முன்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.