ஆதனவரி அறவிடல் நிகழ்வு – கம்பர்மலை வட்டாரம்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உடுப்பிட்டி உப அலுவலக பிரிவிலுள்ள கம்பர்மலை வட்டாரத்தில் மீள்மதிப்பீடு செய்யப்பட்ட ஆதனங்களின் ஆதனவரி அறவிடல் நிகழ்வு 10.01.2025 அன்று கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலையத்தில் பிரதேசசபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டு ஆதனவரி அறவிடும் நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சு செயலாளர் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திருமதி தேவந்தினி பாபு மற்றும் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்