வதிரி முன்பள்ளி மாணவர் கௌரவிப்பும், கலைவிழாவும் – 2024

2024ம் ஆண்டுக்கான வதிரி முன்பள்ளி மாணவர் கௌரவிப்பும், கலைவிழாவும் 2024.12.24ஞாயிற்றுக்கிழமை காலை 09:30மணிக்கு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை செயலாளர் திரு.கணேசன் கம்ஸநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், யா/நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் திரு.க.கிருஷ்ணகுமார் அவர்கள் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி வலயக்கல்வி அலுவலக முன்பள்ளி உதவிக்கல்விபப்ணிப்பாளர் திரு.கனகசபை சத்தியசீலன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
2024ம் ஆண்டு வதிரிமுன்பள்ளியில் தமது முன்பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து தரம் 01ல் கல்வி கற்பதற்காக முன்பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவர்களுக்கான பரிசில்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.