2024ம் ஆண்டிற்கான வடமராட்சிக் கல்வி வலய முன்பள்ளிகளின் கலைவிழா நிகழ்வில் பங்குபற்றுவதற்காக வடமராட்சி வலயத்திற்குட்பட்ட அனைத்து முன்பள்ளிகளுக்கிடையிலும் கலைநிகழ்வுப்போட்டிகள் நடாத்தப்பட்டன. கரவெட்டிக்கோட்டம், பருத்தித்துறைக் கோட்டம், மருதங்கேணிக்கோட்டம் ஆகிய மூன்று கோட்ட மட்ட கலைநிகழ்வுப் போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் 09 நிகழ்வுகள் தெரிவுசெய்யப்பட்டு, அவை வடமராட்சிக் கல்வி வலய முன்பள்ளிகளின் கலைவிழா நிகழ்வில் பங்குபற்ற தகுதிபெறும்.
48 முன்பள்ளிகளைக் கொண்ட கரவெட்டிக் கோட்டமடட்ட முன்பள்ளிகளுக்கிடையிலான கலைநிகழ்வுப்போட்டிகள் 2024.09.01 இன்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் நெல்லியடி முன்பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்குபற்றிய வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் நெல்லியடி முன்பள்ளி மாணவர்களின் கிராமிய நடனம் மூன்றாம் இடத்தைப்பெற்றுக்கொண்டதுடன், வடமராட்சிக் கல்வி வலய முன்பள்ளிகளின் கலைவிழா நிகழ்வில் பங்குபற்றுவதற்கும் தகுதிபெற்றுள்ளது.
மேற்படி கிராமிய நடனத்தில் பங்குபற்றிய மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், இந் நடனநிகழ்வினை சிறப்பாக பயிற்றுவித்த ஆசிரியர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன், இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.