உத்தியோகபூர்வ இணையத்தளம் – அங்குரார்ப்பண நிகழ்வு

வட மாகாண உளளுராட்சித் திணைக்களத்தின் ஆலோசனை, வழிகாட்டல் பயிற்சியில் உள்ளுராட்சி சபைகளினால் உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு இன்று 2024.01.10 காலை 09.00 மணிக்கு கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில், ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.இதில் முதல் கட்டமாக வடமராட்சி தெற்கு மேற்குபிரதேசசபை, பருத்தித்துறைநகரசபை, வலிகாமம் மேற்கு பிரதேசசபை, வேலணை பிரதேசசபை, நெடுந்தீவு பிரதேசசபை ஆகிய 05 உள்ளுராட்சி சபைகளின் இணையத்தளங்கள் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.இந் நிகழ்வில் வடமாகாண அமைச்சு செலாளர்கள், உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிரதேசசபை செயலாளர்கள், இணையத்தள வடிவமைபபு வளவாளர் திரு.கௌரீசன் (Asia Foundation) மற்றும் இணையத்தளத்தை வடிவமைத்த பிரதேசசபை உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சித் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை www.vadamaradchysw.ps.gov.lk எனும் முகவரியூடாக பார்வையிடமுடியும்.