மென்பந்து துடுப்பாட்டப்போட்டி

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையினால் பதிவுசெய்யப்பட்ட சனசமூகநிலையங்களுக்கிடையிலான மென்பந்து துடுப்பாட்டப்போட்டி 2023.12.23,24 ஆகிய தினங்களில் கொலின்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடாத்தப்பட்டது. மேற்படி போட்டிகளில் பங்குபற்றுவதற்காக 09 சனசமூக நிலையங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தபோதிலும் இரண்டு சனசமூக நிலையங்கள் பங்குபற்றியிருக்காமையினால் 07 சனசமூக நிலையங்கள் முதற்சுற்றுப்போட்டிகளில் பங்குபற்றியிருந்தன. முதலாவது அரையிறுதிப் போட்டியில் மண்டான் சனசமூக நிலைய அணியை எதிர்த்து கலாவாணி சனசமூக நிலைய அணி விளையாடியது. இதில் கலாவாணி சனசமூக நிலைய அணி வெற்றிபெற்று இறுதியாட்டாதிற்கு தகுதிபெற்றது. அடுத்த அரையிறுதி ஆட்டத்தில் வடகருணை வளர்மதி சனசமூக நிலைய அணியை எதிர்த்து வதிரி வட்டுவத்தை சனசமூக நிலைய அணி விளையாடியது. இதில் வதிரி வட்டுவத்தை சனசமூகநிலைய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. இறுதிப்போட்டியில் கலாவாணி சனசமூக நிலைய அணியை எதிர்த்து வதிரி வட்டுவத்தை சனசமூக நிலைய மோதியது. இதில் வதிரி வட்டுவத்தை சனசமூக நிலைய அணி வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது. கலாவாணி சனசமூகநிலைய அணி இரண்டாமிடத்தைப்பெற்றுக்கொண்டது. மூன்றாமிடத்திற்கான ஆட்டத்தில் மண்டான் சனசமூகநிலைய அணியை எதிர்த்து வடகருணை வளர்மதி சனசமூக நிலைய அணி மோதியது. இதில் வடகருணை வளர்மதி சனசமூகநிலைய அணி வெற்றிபெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. மண்டான் சனசமூகநிலைய அணி நான்காமிடத்தை பெற்றுக்கொண்டது. இறுதி நிகழ்வின் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டு சிறப்பித்த வடக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களப் பணிப்பாளர் திரு.பா.முகுந்தன் அவர்களால் வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக்கிண்ணங்களும் வெற்றிப்பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.