வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் கரவெட்டி பிரதேச செயலகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தை 25.09.2023 – 05.10.2023 வரை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைகுட்பட்ட பிரதேசங்களில் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளனர். இதற்கமைவாக 25,26.09.2023 ம் திகதிகளில் உடுப்பிட்டி வடக்கு, கரணவாய் வடமேற்கு, மத்தொனி, அல்வாய் தெற்கு, துன்னாலை கிழக்கு, இமையாணன், கரணவாய் வடக்கு, கரவெட்டி மேற்கு, அல்வாய் கிழக்கு மற்றும் துன்னாலை மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.